சன், விஜய் டிவி இல்லை கட்டா குஸ்தி 2 பட சாட்லைட் உரிமையை வாங்கிய தொலைக்காட்சி எது தெரியுமா?
கட்டா குஸ்தி 2
கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி.
செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகி இருந்த இப்படம் காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியாகி இருந்தது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
தற்போது செல்லா அய்யாவு இயக்கத்திலேயே விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா நடிக்க கட்டா குஸ்தி 2ம் பாகம் வெளியானது. முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்தது.

சாட்லைட்
கடந்த ஜுலை 3ம் தேதி வெளியாக இப்படம் ரூ. 50க்கும் கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

பட வெற்றியால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு பிஎம்டபிள்யூ சொகுசு காரையும், இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்கச் சங்கிலியையும் பரிசாக வழங்கியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் படக்குழுவினருக்கு 40 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கினார்.
தற்போது இப்பட சாட்டிலைட் வியாபாரம் பற்றிய தகவல் வந்துள்ளது. அதாவது விரைவில் தமிழ் சின்னத்திரையில் தொடங்க இருக்கும் சோனி விழா தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து கட்டா குஸ்தி 2 படம் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளதாம்.
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri