ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ
கட்டா குஸ்தி 2
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2.

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியானது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் முனீஸ்காந்த், சாரா, கருணாஸ், லிஸ்ஸி வெங்கட், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ. 56 கோடி வசூல் செய்தது. விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.
இந்த நிலையில், திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற 31-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan