மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு
கட்டா குஸ்தி 2
செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கட்டா குஸ்தி.
இதில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் பாகம் வெற்றியடைய இப்போது 2ம் பாகம் படு மாஸாக தயாராகி வெளியாகியுள்ளது.
செல்ல அய்யாவு இயக்க விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
படத்தை ஐசரி கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.

பரிசு
கடந்த ஜுலை 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படம் மொத்தமாக ரூ. 28 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தகவல் வந்துள்ளன.
படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு புதிய BMW காரை பரிசாக கொடுத்துள்ளார். இதோ பாருங்கள்,
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உறுதியளித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu
ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை News Lankasri