கிரிக்கெட்டை வைத்து படம் இயக்கும் கவுதம் மேனன்.. அதுவும் சச்சினை மையமாக வைத்து தான்
கிரிக்கெட் படங்கள்
இந்திய சினிமாவில் இதுவரை கிரிக்கெட்டை வைத்த பல படங்கள் வெளிவந்துள்ளது. ஜீவா, கனா, 83, எம்.எஸ். தோனி வாழ்க்கை வரலாறு, சச்சின் வாழ்க்கை வரலாறு, ஜெர்சி, சென்னை 28 என கிரிக்கெட்டை மையமாக படங்கள் வெளிவந்துள்ளது.
அடுத்ததாக தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படமும் கிரிக்கெட் விளையாட்டை தான் கதைக்களமாக கொண்டுள்ளது.
கவுதம் மேனனின் புதிய படம்
இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனனும் கிரிக்கெட் கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறாராம்.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய காம்ப்லி மற்றும் சச்சின் இருவரை மையாக கொண்டு இப்படத்தில் உள்ள இரண்டு முதன்மை கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளாராம்.
ஆனால், இது தமிழ்நாட்டில் நடக்கும் கதையாக எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இன்று நடந்து வரும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை கமெண்ட்ரியில் கலந்துகொண்ட கவுதம் மேனன், தன்னுடைய கிரிக்கெட் படம் குறித்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
