விண்ணைத்தாண்டி வருவாயா 2.. கவுதம் மேனனின் அடுத்த அதிரடி
விண்ணைத்தாண்டி வருவாயா
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடித்திருந்தார்கள். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
சிறந்த விமர்சனத்தை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வசூலை குவித்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று பல வருடங்களாகவே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விடிவி 2 வருமா - கவுதம் மேனன் பதில்
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் கவுதம் மேனனிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குனர் கவுதம் மேனன் " விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் நடந்து வருகிறது. விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் " என கூறியுள்ளார்.

இதன்முலம் காத்திருந்த ரசிகர்களால் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் தகவலை கூறியுள்ளார் கவுதம் மேனன்.