வெற்றிமாறன் கதையில் சிம்பு.. இணையும் வெறித்தனமான வெற்றி கூட்டணி
சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. STR 48 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் பெரிதாக இல்லை.
இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் கவுதம் மேனன் உடன் சிம்பு இணையப்போகும் படம் குறித்து அப்டேட் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டங்களில் ஒன்று சிம்பு - ஜிவிஎம்.
மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி
இவர்கள் இருவரும் இதுவரை மூன்று முறை இணைந்துள்ளனர். அந்த மூன்று படங்களுமே மாபெரும் வெற்றியடைந்துள்ளது. நான்காவது முறையாக இணையவிருக்கும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறார்களாம்.
ஆனால், இதில் மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், வெற்றிமாறனின் கதையை கேட்டு வாங்கியுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன். இயக்குனர் வெற்றிமாறனின் கதை, திரைக்கதை, வசனத்தில் தான் இப்படம் உருவாகவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
