நான் தான் மணிரத்னம்.. தவறான கேள்விக்கு கூலாக பதில் சொன்ன கௌதம் மேனன்! வைரல் வீடியோ
கெளதம் மேனன்
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட் ஆகி இருக்கிறது. சிம்பு - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சேரும் போது இந்த மேஜிக் நிச்சயம் நடக்கும் என ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
கௌதம் மேனன் இந்த பட ப்ரோமோஷனுக்காக தெலுங்கு சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.

நான் தான் மணிரத்னம்
கௌதம் மேனன் தான் செக்க சிவந்த வானம் படத்தை இயக்கியவர் என நினைத்துக்கொண்டு அந்த தயாரிப்பாளர் கெளதம் மேனனிடம் 'மூன்று நான்கு ஹீரோக்களை வைத்து படம் எடுப்பது எவ்ளோ கஷ்டமாக இருந்தது' என கேள்வி கேட்கிறார்.
அந்த படத்தை நான் இயக்கவில்லை என கௌதம் விளக்கம் சொல்வார் என பார்த்தால், அவர் 'நான் தான் மணிரத்னம், நான் படம் எடுத்தால் ஹீரோக்கள் கரெக்ட்டாக வந்துடுவாங்க' என sarcastic ஆக பதில் கொடுத்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது ட்ரோல் கன்டென்ட் ஆகவும் மாறிவிட்டது.
He really handled it well. What was the anchor thinking here pic.twitter.com/OKtXjB1YHF
— Madras Film Screening Club ? (@MadrasFSC) September 20, 2022
கையில் குழந்தையுடன் சௌந்தர்யா.. பின்னால் நிற்கும் ரஜினி! வைரல் போட்டோ