வெளுத்து வாங்கிய கவுதம் மேனன்.. கடுப்பில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவுகள்

Report

கவுதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

ஆனால், ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் கடுப்பான இயக்குனர் கவுதம் மேனன் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

கவுதம் மேனன் பதிலடி 

இவர் அண்மையில் அளித்த பேட்டியில், " ப்ளூ சட்டை மாறன் பற்றி பேசவே கூடாது என்று நினைக்கிறன். இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன். எனக்கெல்லாம் பயங்கரமான கடுப்பு. எதற்கு இப்படி ஒரு விமர்சனம் செய்யவேண்டும். அவருக்கு காசு வரவேண்டும். அவருக்கு ஸ்பான்ஸர் வரவேண்டும் என்பதற்காக இப்படியா.

வெளுத்து வாங்கிய கவுதம் மேனன்.. கடுப்பில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவுகள் | Gautham Menon Slipper Shot To Blue Sattai Maaran

நீங்க விமர்சனம் பண்ணுங்க, ஆனால் அதற்க்கு ஒரு எல்லை உள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் விமர்சனம் கூட மோசமாக பேசியிருந்தார். படம் ஹிட் ஆனாலும் விமர்சத்தில் தவறாக பேசிவிட்டு, எங்கேயோ ஒரு இடத்தில் படம் நல்ல இருக்குனு போய்டுவாரு. இதனால், எனக்கு இறங்கி ஏதாச்சும் செய்யலாமானு கோபம் வருது. மத்த இயக்குனர்களுக்கு வருதானு எனக்கு தெரியாது, ஆனா எனக்கு இறங்கி செய்யலாமானு கோபம் வருது " என்று கூறியுள்ளார்.

வெளுத்து வாங்கிய கவுதம் மேனன்.. கடுப்பில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவுகள் | Gautham Menon Slipper Shot To Blue Sattai Maaran

கடுப்பு பதிவுகள்

இதனால் கடுப்பான ப்ளூ சட்டை மாறன் தேவையில்லாமல் சில பதிவுகளை இயக்குனர் கவுதம் மேனனை தாக்கி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். " சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர். கௌதம் வாசுதேவ்..மேனன் ". என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி கடுப்பில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு கொண்டே இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US