சினிமா குறித்து அதிரடி முடிவு எடுத்த கௌதம் வாசுதேவ் மேனன்... என்ன இப்படி சொல்லிட்டாரு
கௌதம் மேனன்
தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது.
அப்படி ஸ்டைலிஷ்ஷான, ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் காதல் படங்கள் இயக்கி தனக்கென ஒரு தனி இடம் ரசிகர்களின் மனதில் பிடித்தவர் தான் கௌதம் மேனன்.
மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாணரம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து மக்கள் மறக்கவே முடியாத படங்களாக கொடுத்தார்.

அதிரடி முடிவு
படங்களை இயக்கிவந்த கௌதம் மேனன் சில படங்களில் தலைகாட்டி வந்தார். ஒரு கட்டத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து கடுமையான பொருளாதார பிரச்சனையில் சிக்க படங்களில் நடிக்க தொடங்கினார்.
தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் இப்போது அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
அதாவது கௌதம் மேனன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லையாம், இப்போது நடிக்க ஆர்வமும் இல்லை. நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது, ஒருசில படங்களில் இயக்குனர்களுக்காகவே நடித்தேன்.
ஆனால் நடிக்கும் போதெல்லாம் நடிக்கிறதுக்காக நாம் வரவில்லை என்ற எண்ணம் இருக்கும், அதனால் இனி நடிக்கப்போவதில்லை என கௌதம் மேனன் பேட்டி கொடுத்துள்ளார்.