'காதல் மன்னன்' ஜெமினி கணேசனின் மறக்க முடியாத சிறந்த படங்கள்
காதல் உணர்வை அதிகம் வெளிக்காட்டும் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்ததனால் "காதல் மன்னன்" என பட்டம் பெற்றவர் நடிகர் ஜெமினி கணேசன். அவரது திரைப்பயணத்தில் முக்கியமான சில படங்கள் பற்றி பார்க்கலாம்.
களத்தூர் கண்ணம்மா
ஏவிஎம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா 100 நாள் ஓடி ஹிட் ஆன படம். நோபடீஸ் சைல்ட் என்ற சீன மொழி படத்தின் தழுவல் தான் இந்த படம் என்றும் சொல்லலாம். போரால் ஆதரவில்லாமல் நிற்கும் சிறுமி பல கஷ்டங்களை அனுபவித்து, தனது அப்பா அம்மாவை தேடுவது போல கதை இருக்கும்.
இதில் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்து இருப்பார். அந்த படம் மூலமாக கமல் என்ற நடிகர் கோலிவுட்டுக்கு கிடைத்ததால் தற்போதும் சினிமா ரசிகர்கள் நினைவு கொள்ளும் படமாக களத்தூர் கண்ணம்மா இருந்து வருகிறது.
ஜெமினி - சாவித்ரி ஆகியோரை விட கமல் தான் இந்த படத்தில் எல்லோரையும் ஈர்த்து இருப்பார். 'அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே' பாடல் தற்போதும் அதிகம் ரசிக்கப்படும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாண பரிசு
1959 ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆன படம் கல்யாண பரிசு. பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் முதல் படம் இது. முக்கோண காதல் கதை.
கல்லூரியில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி இருவரும் காதலர்கள். அதன் பின் ஒரு கட்டத்தில் சாவித்ரியின் வீட்டுக்கே குடிவருகிறார் ஜெமினி. அவர்கள் காதலிப்பது வீட்டில் இருக்கும் சாவித்ரியின் அக்கா விஜயகுமாரிக்கு தெரியாது.
அதனால் விஜயகுமாரி ஜெமினியை ஒருதலையாக காதலிக்கிறார். அதை பற்றி அறிந்த சாவித்ரி.. தனது காதலை தியாகம் செய்து அக்காவை ஜெமினிக்கு கட்டி வைக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக திரைக்கதையில் காட்டி இருப்பார் இயக்குனர்.
பார்த்திபன் கனவு
கல்கி எழுதிய 'பார்த்திபன் கனவு' என்ற நாவலின் அடிப்படையில் 1960ல் வெளிவந்த படம் இது. சோழ இளவரசன் விக்ரமன் ரோலில் நடித்திருப்பார் ஜெமினி. பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் வைஜெயந்தி மாலா, சரோஜா தேவி, டிஎஸ் பாலையா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
அதிகம் பாராட்டப்பட்ட படம் இது என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி தான் அடைந்தது.
நான் அவனில்லை
1974ல் வெளிவந்த இந்த படத்தை ஜெமினியே தயாரித்து இருந்தார். பல பெண்களை காதலித்து ஏமாற்றும் பிளேபாய் கதாபாத்திரத்தில் ஜெமினி நடித்து இருப்பார். கே.பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை படத்தில் பல வித பெயர்கள் மற்றும் கெட்டப்பில் நடித்து ஏமாற்றும் ஜெமினி ஒன்பது விதமான ரோல்களில் நடித்து இருப்பார் அவர்.
'நானும் எத்தனை நாள் தான் நல்லவனாவே நடிக்குறது' என நினைத்து இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பார் போல ஜெமினி கணேசன்.
உன்னால் முடியும் தம்பி
1988ல் ஜெமினி கணேசன் மற்றும் கமல்ஹாசன் இருவரும் சேர்ந்து நடித்த படம் இது. பிரபல இசை கலைஞராக ஜெனினி கணேசன் நடிப்பில் அசத்தி இருப்பார்.
தந்தை மகன் இருவரும் கொள்கையில் வெவ்வேறாக இருக்கின்றனர். போதைக்கு அடிமையான மக்களை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறார் மகன். அதனால் நடக்கும் விஷயங்கள் தான் கதை.
Kgf 2 படத்திற்காக யஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவா?- வெளிவந்த விவரம்