தமன்னா, காஜல் இல்லை..தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் தெரியுமா
சினிமாவை பொறுத்த வரை ஒரு படத்தின் வெற்றி தோல்வியை பொறுத்து தான் அந்த நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதில், குறிப்பாக தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து கீழே காணலாம்.
நயன்தாரா:
'ஐயா' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.
இவர் ஒரு படத்திற்கு மட்டுமே ரூ. 13 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் பெற்று அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளாராம்.
அனுஷ்கா:
பாகுபலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இன்றும் ரசிகர்கள் பலரால் பாராட்டப்படும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.
அவ்வாறு பிரபலமான இவர் ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 4 கோடி முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே:
தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் நடித்து பிரபலமானவர் பூஜா ஹெக்டே. தற்போது, தமிழில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
இவர் ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.
த்ரிஷா:
'நீ மனசு எனக்கு தெலுசு' என பல தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான த்ரிஷா ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா:
கீதா கோவிந்தம்,' 'சரிலேரு நீக்கேவரு' மற்றும் 'புஷ்பா: தி ரைஸ்' என பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
