33 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்?- முதன்முறையாக கூறிய கில்லி பட நடிகை
கில்லி படம்
நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது கில்லி.
இப்படத்தில் விஜய் மற்றும் அவரது தங்கையாக நடித்தவருக்கு நல்ல சூப்பரான காட்சிகள் அமைய ஜெனிபர் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.
அதன்பிறகு அவர் சில படங்கள் நடித்தாலும் கில்லி போன்று நல்ல ரீச் தந்த படம் அமையவில்லை.

நடிகையின் கொண்டாட்டம்
இந்த நிலையில் நடிகை ஜெனிபர் தனது 33வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அதோடு திருமணம் குறித்து பேசிய இவர், 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறேன், எனக்கு திருமணம் ஆகவில்லை, குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.
என்னுடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன், எனது விருப்பம் போல என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொள்கிறேன் என பேசியுள்ளார்.
முதன்முறையாக வெளியான பிரபு தேவானின் இரண்டாவது மனைவியின் வீடியோ- இதோ பாருங்க