முன்பதிவில் பட்டையை கிளப்பும் கில்லி.. ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் விவரம்
ஜனநாயகன்
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் ஜனநாயகன் படம் ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் கிடைக்காத காரணத்தினால் படக்குழு நீதிமன்றத்தை நாடினார்கள்.

ஆனால், நீதிமன்றத்தில் அவர்கள் எதிர்பார்த்தது போல் சீக்கிரமாக ஒரு முடிவு கிடைக்காததால், தற்போது வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு, மீண்டும் சென்சாரிடம் சென்றுள்ளனர். தணிக்கை வாரியம் தற்போது ரீவைசிங் கமிட்டி அமைத்து ஜனநாயகன் படத்தை பார்க்கும் வேலையை தொடங்கியுள்ளனர்.

இந்த மாதம் இறுதிக்குள் படத்திற்கு சென்சார் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குள் வெளிநாட்டு விநியோகஸ்தர் ஒருவர் ஏப்ரல் மாதம் வரை ஜனநாயகன் படம் வெளியாகாது என அறிக்கை ஒன்றை வெளியிட ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர்.
கில்லி ரீ-ரிலீஸ்
ஜனநாயகன் சென்சார் பிரச்சனை காரணமாக விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் வருத்தத்துடன் இருந்தாலும், மறுபக்கம் கில்லி ரீ-ரிலீஸ் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸான கில்லி படம் மாபெரும் வசூல் வேட்டையை பாக்ஸ் ஆபிஸில் நடத்தியது.

இதை தொடர்ந்து நாளை கில்லி படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இதற்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்த முன்பதிவில் இதுவரை ரூ. 35 லட்சம் கில்லி படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
அரசியல் முக்கியத்துவம் பெறும் விஜய்யின் இரண்டாவது டெல்லி பயணம் - இந்த முறை என்ன திட்டம்? IBC Tamilnadu
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri