குக் வித் கோமாளி பிரபலத்தின் பெயரில் பெண்ணிடம் மோசடி.. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்
தமிழ் சினிமாவில் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் தர்ஷன். இவர் கனா, தும்பா போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்திருப்பார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.
பணமோசடி
சமீபத்தில் தர்ஷன் பெயரை வைத்து மர்ம நபர்கள் சோசியல் மீடியாவில் போலி கணக்கை உருவாக்கி ஒரு பெண்ணிடம் பேசி வந்துள்ளனர்.
அந்த பெண்ணும், நடிகர் தர்ஷன் என்று நினைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவர் அனுப்பிய புகைப்படங்களை வைத்து ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிடுவதாக கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர்.
இதற்கு பயந்து அந்த பெண்ணும் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இருப்பினும் அந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். கடைசியில் அந்த பெண் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர் அலாவுதீன், வாகித் என இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
