GOAT நாயகி வெளிநாட்டில் வெறித்தனமாக சண்டை பயிற்சி.. புகைப்படத்துடன் இதோ
நடிகை மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக The Greatest of All Time (GOAT) படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார். அதில் இளம் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிப்பதாக தெரிகிறது.
ஷூட்டிங் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நடக்கிறது. சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் GOAT கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்து முடிந்தது.
மேலும் இன்னும் சில பகுதிகளை படமாக்க ரஷ்ய நாட்டுக்கு செல்ல இருக்கிறது படக்குழு. ஷூட்டிங்கிற்காக மொத்த டீமும் அடுத்த மாதம் கிளம்ப இருக்கின்றனர்.

பிரபலங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- சூப்பர் போட்டோவுடன் நடிகையின் பதிவு
வெளிநாட்டில் சண்டை பயிற்சி
நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்று இருக்கிறார். அங்கு அவர் Muay Thai என்ற பாக்சிங் பயிற்சி பெற தான் சென்று இருக்கிறாராம்.
அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. கோட் படத்திற்காக தான் அவர் பாக்சிங் பயிற்சி பெறுகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

