விஜய்யின் GOAT திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்
GOAT
இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT).
பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். கோட் படத்தில் விஜய் இரண்டு விதமாக கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிகிறது.
டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ரிலீஸ்?
தற்போது GOAT படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இனி வரும் நாட்களுக்கு படம் குறித்து நிறைய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
