சிம்பு திருமணம் செய்ய இவர் தான் பெண் பார்த்து கொடுக்கணும்: டி.ஆர்
சிம்பு
நடிகர் சிம்பு என்றால் வம்பு என ஒரு காலத்தில் பேச்சு இருந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவர் மாநாடு படத்தில் உடல் எடையை குறைத்து நடித்தது அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுத்தது. அந்த படம் வசூல் ரீதியாக ஹிட் ஆனது.
அதன் பின் வெந்து தணிந்தது காடு படமும் சிம்புவுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. மேலும் தற்போது பத்து தல படத்தில் சிம்பு நடித்து இருக்கும் நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் விஜய்யின் வாரிசு படத்திற்காக சிம்பு பாடிய 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆனது. பாடல் வீடியோவில் சிம்பு நடனம் ஆடி இருந்ததும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
கடவுள் தான் பெண்ணை தேர்வு செய்யனும்..
சிம்புவுக்கு தற்போது 39 வயதாகிறது. அவருக்கு எப்போது திருமணம் என்று தான் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அவருக்கு தகுந்த பெண்ணை கடந்த பல மாதங்களாக தீவிரமாக சிம்புவின் பெற்றோர் தேடி வருகிறார்கள். ஆனால் திருமணம் எல்லாம் நடக்கும்போது நடக்கும் என VTK பட விழாவில் சிம்புவே பேசி இருந்தார்.
இந்நிலையில் சிம்புவின் அப்பா டிஆர் சென்னை காஞ்சிபுரத்தில் கோவில் ஒன்றில் சிம்புவின் ஜாதகத்தை வைத்து பூஜை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் சிம்பு திருமணம் பற்றி பேசினார்.
"சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை நான் தேர்வு செய்வதை விட, என் மனைவி உஷா தேர்வு செய்வதை விட, என் இல்லத்திற்கு ஏற்ற மருமகளை இறைவன் தான் சார் தேர்வு செய்து கொடுக்கவேண்டும்" என டிஆர் கூறி இருக்கிறார்.
நடிகை சோனியா அகர்வாலா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்