8 நாட்களில் தமிழகத்தில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் தெரியுமா, இதோ
குட் பேட் அக்லி
தமிழ்நாட்டில் எப்போதுமே அஜித் திரைப்படம் என்றால் வசூல் மாபெரும் அளவில் குவியும். வேதாளம், விஸ்வாசம், துணிவு போன்ற பல படங்கள் தமிழ்நாட்டில் வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.
அந்த வகையில் சென்ற வாரம் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் நாள் தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தனர்.
அஜித்தின் கெரியரில் தமிழ்நாட்டில் ஓப்பனிங் டே கலெக்ஷன் இதுவே ஆகும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தனர். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் வசூல் மன்னனாக அஜித் இருக்கிறார்.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில் 8 நாட்களை கடந்திருக்கும் இப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா. 8 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 125.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் மாபெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.