நடிகர் அஜித்தின் கரியர் பெஸ்ட் படம் குட் பேட் அக்லி.. மொத்த வசூல் விவரம் இதோ
குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.
த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்தது. மேலும் திரையரங்கை தொடர்ந்து தற்போது OTT-யிலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல் விவரம்
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ரூ. 170 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
