ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் குட் பேட் அக்லி.. எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ப்ரீ புக்கிங்
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து Youtubeல் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் கலைக்கட்டி வருகிறது.
ரிலீஸுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 9.5 கோடி ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் மிகப்பெரிய வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.