குட் பேட் அக்லி இன்னும் எவ்வளவு வசூல் செய்தால் லாபம் தெரியுமா.. இதோ
குட் பேட் அக்லி
சென்ற வாரம் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது.
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான இப்படம் ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், சுனில், பிரபு, பிரசன்னா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
முதல் நாளில் இருந்தே இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 9 நாட்களில் உலகளவில் ரூ. 218 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
லாபம்
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் இன்னும் எவ்வளவு வசூல் செய்தால், லாபம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்னும் ரூ. 10 கோடி மட்டுமே வசூல் செய்தால் இப்படம் லாபத்தை நோக்கி நகர துவங்கிவிடும் என தகவல் தெரிவிக்கின்றனர். அதுவும் இன்னும் ஒரே நாளில் நடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.