குட் பேட் அக்லி படத்தில் வரும் வெறித்தனமான ஜெயில் சண்டை காட்சி.. தியேட்டர் அதிர போகுது
குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 24 மணி நேரத்தில் Youtube-ல் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனையும் படைத்தது.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டீசரில் வரும் ஒரு காட்சியில், அஜித் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார் போல் காட்டப்பட்டு இருந்தது.
தியேட்டர் அதிர போகும் காட்சி
இந்த நிலையில், ஜெயிலில் நடக்கும் சண்டை காட்சி குறித்து பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதில் "ஏப்ரல் 10ம் தமிழ்நாடு மட்டுமல்ல, உலகமே தெறிக்கப்போகுது. ஜெயிலில் ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அந்த சண்டை காட்சியை மட்டும் பாருங்க எப்படி இருக்கப்போகிறது என்று. கலக்கிருக்காரு அஜித். டூப் போடாம அப்படி பண்ணிருக்காரு. அந்த ஜெயில் மிக பிரம்மாண்டமாக போடப்பட்ட செட். அது இந்த பேட் அஜித் இருக்காரு இல்லையா அவர் போடுற சண்டதான் அது" என கூறியுள்ளார்.