படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை, அதற்குள் கோடிக்கணக்கில் விற்பனை ஆன குட் பேட் அக்லி.. மாஸ் காட்டும் அஜித்
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் அஜித்துடன் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா இணையவுள்ளாராம். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இதுமட்டுமின்றி மீனா மற்றும் சிம்ரன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் என்கின்றனர்.
மே 1 அஜித்தின் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக குட் பேட் அக்லி படத்திலிருந்து சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.
வெளிநாட்டு உரிமை
குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் துவங்காத நிலையில், அதற்குள் படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை ஆகிவிட்டதாம். அதுவும் ரூ. 22 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

மஞ்சம்மல் பாய்ஸ் படத்தில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜயமுத்து.. நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே விற்பனை ஆகியுள்ளது. இது அஜித்துக்கு வெளிநாட்டில் கிடைத்துள்ள மிகப்பெரிய மார்க்கெட்டை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
