அடேங்கப்பா இலங்கையில் அஜித்தின் குட் பேட் அக்லி இத்தனை கோடி வசூலா?- முதல் வார வசூல் எவ்வளவு?
குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிவிட்டது.
இந்த கதையில் ரெட் டிராகன் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இவரின் மனைவியாக வரும் த்ரிஷாவிற்கு குழந்தை பிறந்த நிலையில் திருந்தி வந்தால் மட்டுமே தன் குழந்தையை தொட வேண்டும் என தடை விதிக்கிறார்.
இதனால் அஜித் உனது 18வது பிறந்தநாளில் நான் திருந்தி வருவேன் என குழந்தை மீது சபதம் எடுத்து சிறைக்கு செல்கிறார்.
18 ஆண்டுகள் கழித்து தனது மகனை பார்க்க அஜித் வர, அவரது மகன் போதை பொருள் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டு சிறைக்கு செல்கிறார். தன்னுடைய பழைய எதிரிகளின் வேலை இது என்று களமிறங்கிறார் அஜித்.
பின்னர் தன் மகனை சிறையில் மீட்டாரா? இல்லையா? மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பது படத்தின் கதை.
பாக்ஸ் ஆபிஸ்
இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் செம மாஸ் காட்டிவரும் அஜித்தின் குட் பேட் அக்லி படம் இலங்கையில் செம கலெக்ஷன் செய்து வருகிறதாம். முதல் வார முடிவில் இப்படம் ரூ. 2 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.