ப்ரீ புக்கிங்கில் கோடியில் வசூலை குவிக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி.. அடேங்கப்பா இவ்வளவா?
குட் பேட் அக்லி
நடிகர் அஜித்தின் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் வெளிவருவது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
கடந்த பிப்ரவரி மாதம் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவர உள்ளது.
படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதுவும் அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அடேங்கப்பா இவ்வளவா?
இந்நிலையில், ரிலீஸுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
அதாவது, படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இல்லாத வசூல் சாதனையை அஜித்தின் இந்த திரைப்படம் செய்யும் என எதிர்பாக்கப்படுகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
