இதுவரை குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. ப்ரீ புக்கிங் கலெக்ஷன்
குட் பேட் அக்லி
அஜித்தின் நடிப்பில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான கொண்டாட்டம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் துவங்கிவிட்டது.
கண்டிப்பாக முதல் நாள் வேற லெவலில் கொண்டாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து குட் பேட் அக்லி வெளிவரவுள்ள நிலையில், இவருடைய இயக்கத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். மேலும் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.
ப்ரீ புக்கிங்
ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆம், இதுவரை உலகளவில் நடைபெற்று வரும் ப்ரீ புக்கிங்கில், குட் பேட் அக்லி திரைப்படம் ரூ. 16 கோடி வரை வசூல் செய்துள்ளது.
கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கிலேயே மாபெரும் வசூல் சாதனையை இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.