பல கோடி கொடுத்து அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை வாங்கிய தயாரிப்பாளர்.. அடேங்கப்பா
விடாமுயற்சி - குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் சமீபத்தில் துபாயில் நடைபெற்று கார் ரேஸில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இவருடைய வெற்றியை தமிழகமே கொண்டாடியது.
அஜித்தின் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
படத்தை வாங்கிய தயாரிப்பாளர்
இந்த நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா உரிமையை பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ராகுல் வாங்கியுள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து, விநியோகம் செய்து வரும் ராகுல், இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா உரிமையை ரூ. 72 கோடிக்கு வாங்கியுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
அஜித் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில், இவ்வளவு பெரிய பிஸினஸ் எந்த படத்திற்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
You May Like This Video