குட் பேட் அக்லி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா? ரசிகர்களுக்கு குட் நியூஸ்
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்கில் படத்தை காண அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், இன்னும் சில தினங்களில் படம் வெளியாக இருப்பதால் தமிழகத்தில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, டிக்கெட் முன்பதிவு வரும் 4 - ம் தேதி இரவு 8:02 மணிக்கு துவங்குகிறது என கூறப்படுகிறது.