ஜீ தமிழின் பாரிஜாதம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் நியூஸ்... பார்க்க தயாரா?
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், வீரா, இதயம், சின்னஞ்சிறு கிளிமே, பாரிஜாதம், சாமந்தி என நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு தொடரின் கதைக்களமும் வெவ்வேறு என்றாலும் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களாக தான் உள்ளது. நாமும் நமது சினிஉலகம் பக்கத்தில் ஜீ தமிழ் சீரியல்களின் நாள் தோறுமான எபிசோடுகள் குறித்து செய்திகள் போட்டு வருகிறோம்.
இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் குறித்த தகவல் தான் வந்துள்ளது.

ஸ்பெஷல்
தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகைகளில் டாப் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ஆல்யா மானசா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி, ராஜா ராணி 2 சீரியலை தொடர்ந்து சன் டிவி பக்கம் வந்தார்.
அதில் இனியா என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்தார், அந்த தொடரும் எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது. இனியா சீரியல் முடிந்த பின்னர் கொஞ்சம் இடைவேளை எடுத்தவர் ஜீ தமிழில் பாரிஜாதம் சீரியலில் நடிக்க கமிட்டானார்.

இதில் காது கேட்காத ஒரு நபராக நடித்து வருகிறார். சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே நாயகனாக நடித்தவர் மாறினார். தற்போது விஷால் கதாபாத்திரத்தில் அக்ஷய் கமல் நடித்து வருகிறார்.
இப்போது சீரியல் குறித்த ஒரு தகவல் என்னவென்றால் வரும் ஞாயிறு அன்று பாரிஜாதம் சீரியலின் ஸ்பெஷல் எபிசோட் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.