பாக்யா வீட்டில் நுழைந்த கோபி! ராதிகா நிலைமை? - பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் ப்ரொமோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக்கிவிட்டார். அவர் நடுரோட்டில் தள்ளாடுவதை பார்த்து ஒருமுறை பாக்யாவே காரில் கொண்டு சென்று விடுகிறார்.
மேலும் கோபியின் அம்மா அவரை அழைத்து 'ராதிகாவை விட்டுவிட்டு வந்துவிடு' என கூறுகிறார். இது பற்றி ராதிகா பாக்யாவிடம் கோபமாக கேட்க 'நான் தூக்கி போட்டதை தான் நீங்க தூக்கி வெச்சிருக்கீங்க. அது எனக்கு வேண்டாம்' என பதிலடி கொடுக்கிறார்.
பாக்யா வீட்டில் கோபி
இந்நிலையில் தற்போது ஒரு புது ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டு காரில் ஏறுவதை மூத்த மகன் செழியன் பார்த்துவிடுகிறார். நான் ட்ராப் செய்கிறேன் என அழைத்து செல்ல, 'ராதிகா வீட்டுக்கு போகாத' என கோபி கூறுகிறார்.
அதன் பின் கோபியை பாக்யா இருக்கும் வீட்டுக்கு அழைத்து செல்கிறார் செழியன். அப்போது கோபியின் அம்மா ஷாக் ஆக, எழில் அவரை உடனே ராதிகா வீட்டில் கொண்டு சென்று விடும்படி கூறுகிறார்.
வாக்குவாதத்திற்கு பின் கோபி இங்கே தான் இருப்பான் என அவரது அம்மா கோபத்துடன் கூறிவிடுகிறார். இதனால் அடுத்து என்னவெல்லாம் பிரச்சனை வருமோ. ப்ரொமோ இதோ..
ராஜமௌலியின் அடுத்த பட கதை.. மகேஷ் பாபு இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா?