நாயகன் சரத்குமாருக்கு இணையாக நாட்டாமை படத்திற்கு சம்பளம் வாங்கியுள்ள கவுண்டமணி.. எவ்வளவு தெரியுமா?
நாட்டாமை படம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய வெற்றிப்படங்களில் ஒன்று நாட்டாமை.
சரத்குமார், மீனா, குஷ்பு, கவுண்டமணி, செந்தில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படம் 1994ம் ஆண்டு வெளியானது.

பயங்கர விபத்து, மூளை நரம்பில் பாதிப்பு, பிழைக்க முடியாது என்ற மருத்துவர்- பிரபல விஜய் டிவி சீரியல் நடிகையின் சோக பக்கம்
ரூ. 55 லட்சத்தில் உருவான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. இந்த படத்தில் கவுண்டமணி-செந்தில் இருவரின் காமெடி காட்சிகள் இப்போதும் மக்களால் கொண்டாடப்படும்.
படத்தின் ஒரு காட்சியில் மிக்சர் சாப்பிட்டவரை இப்போது மக்கள் யார் இவர் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சம்பள விவரம்
காமெடியில் அவரது காலத்தில் மிகவும் உச்சத்தில் இருந்த கவுண்டமணி ஒரு படத்தில் நடிக்க ஹீரோ-இயக்குனருக்கு நிகராக சம்பளம் பெற்றுள்ளாராம்.
அதாவது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை படத்தில் காமெடியனாக நடிக்க ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கினாராம். படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார், ஹீரோ சரத்குமார் இருவருமே அப்படத்திற்காக ரூ. 5 லட்சம் சம்பளமே வாங்கினார்களாம்.
இதனை ஒரு பேட்டியில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
