திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.பி.முத்து- ரசிகர்கள் அதிர்ச்சி
ஜி.பி.முத்து
டிக் டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர் ஜி.பி.முத்து. அந்த செயலி தடை செய்யப்பட்டதும் யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.
இடையில் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதில் பங்குபெற்றார், ஆனால் சில நாட்களிலேயே என்னால் இதில் கலந்துகொள்ள முடியாது என கூறி வெளியேறினார்.
அதன்பிறகு சில படங்கள், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜி.பி.முத்து இப்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.

மருத்துவமனையில் பிரபலம்
தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், ஆதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ஆனால் இவருக்கு திடீரென என்ன ஆனது, இப்போது எப்படி உள்ளார் என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை.

மகள் இறந்து 12 ஆண்டுகள் ஆனது, புகைப்படம் பதிவிட்டு பாடகி சித்ரா போட்ட உருக்கமான பதிவு- வருந்தும் ரசிகர்கள்
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    