விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் படப்பிடிப்பில் பிக்பாஸ் புகழ் ஜி.பி.முத்து- இந்த தொடரிலா நடிக்கிறார்?
விஜய் டிவி
பிக்பாஸ் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என 4 பேர் வெளியேறிவிட்டார்கள்.
இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை. ரசிகர்கள் ஒருவரை தான் நினைக்கிறார்கள், ஆனால் யார் வெளியேறுவார் என்பது கமல்ஹாசனிடம் தான் உள்ளது.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜி.பி.முத்து குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிஸியாகவே உள்ளார்.
சீரியல் படப்பிடிப்பு
தற்போது என்னவென்றால் ஜி.பி.முத்து விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான தென்றல் வந்து என்னை தொடும் தொடர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருக்கிறார். அந்த சீரியல் நடிகர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஜி.பி.முத்து இந்த தொடரில் நடிக்கிறாரோ என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகர் சியான் விக்ரமின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்