முதல் நாளே கமல் ஹாசனை கடுப்பாக்கிய ஜி.பி. முத்து.. படுவைரலாகும் வீடியோ

By Kathick Oct 10, 2022 02:40 AM GMT
Report

ஜி.பி. முத்து பிக் பாஸ்

கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனுடைய Grand Opening நேற்று ஒளிபரப்பானது. இதில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் Youtube பிரபலம் ஜி.பி. முத்து சென்றார்.

அதன்பின், அசல் கோளாறு, ராபர்ட், அசீம், ஷிவின் கணேசன் என தொடர்ந்து 20 போட்டியாளர்களும் உள்ளே சென்றனர்.

முதல் நாளே கமல் ஹாசனை கடுப்பாக்கிய ஜி.பி. முத்து.. படுவைரலாகும் வீடியோ | Gp Muthu Reason For Kamal Angry In Bigg Boss 6

ஜி.பி. உள்ளே சென்ற பிறகு சில நேரம் அவர் தனியாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். தனியாக இருந்தால் தனக்கு மிகவும் பயம் என்று அவர் கூற அதை ரசிகர்கள் நகைச்சுவையாக ரசித்தனர்.

இதன்பின், ஜி.பி முத்துவிடம் பேசிய கமல், டிக்ணிக்கல் கோளாறு காரணமாக நாளை தான் அனைவரும் வருவார்கள், இன்று நீங்கள் மட்டும் தான் தனியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

கடுப்பான கமல்

இதனால் பதற்றமடைந்த ஜி.பி.முத்து, என்னால் தனியாக இருக்க முடியாது, யாரையாவது அனுப்புங்கள் என்று கமலிடம் கூற, கமல் பல விதத்தில் ஜி.பி.முத்துவை கலாய்த்து பேசிக்கொண்டிருந்தார்.

முதல் நாளே கமல் ஹாசனை கடுப்பாக்கிய ஜி.பி. முத்து.. படுவைரலாகும் வீடியோ | Gp Muthu Reason For Kamal Angry In Bigg Boss 6

அப்போது, ஆதாம், ஏவாள் குறித்து பேசி, ஏவாள் வரவரைக்கும் ஆதாம் காத்திருந்தது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்க என்று கமல் கூறினார். இதற்க்கு ஜி.பி.முத்து, ஆதாமா அது யாரு? என்று கேட்க சற்று கமல் கடுப்பானார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US