நடிகர் சூர்யா என்னை நம்பவில்லை, வருத்தத்துடன் பேசிய கௌதம் மேனன்.. அப்படி என்ன ஆனது?
சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் கங்குவா.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடித்த இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது. இப்படத்தின் ஒரு காட்சியின் போது சூர்யா கடுமையாக காயம் எல்லாம் பட்டார்.
ஆனால் பெரிய அளவில் எதிர்ப்பார்த்த இந்த படம் சரியாக ஓடவில்லை, பாக்ஸ் ஆபிஸிலும் மோசமான கலெக்ஷனை பெற்றது.
கௌதம் மேனன்
சூர்யா திரைப்பயணத்தில் வெற்றிப் படங்களாக அமைந்தது காக்க காக்க, வாரணம் ஆயிரம். எனவே சூர்யா-கௌதம் மேனன் இணைந்தாலே அப்படம் வெற்றி என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் வந்துவிட்டது.
ஆனால் கௌதம் மேனன் ஒரு பட வாய்ப்பை சூர்யா நிராகரித்துள்ளாராம், இது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்க மறுத்தது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.
வேறு எந்த நடிகர் மறுத்திருந்தாலும் கவலையில்லை, சூர்யா மறுத்ததுதான் பெரிய வருத்தம். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை இயக்கிய என்னை அவர் நம்பியிருக்கலாம் என கௌதம் மேனன் பேட்டியில் கூறியுள்ளார்.