சென்னையில் மட்டுமே குலு குலு படம் இவ்வளவு வசூலித்துள்ளதா?- செம கலெக்ஷன்
சந்தானத்தின் புதிய படம்
காமெடி நாயகனாக எல்லா முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் சந்தானம். சிறந்த காமெடியனாக விஜய் அவார்ட்ஸ் விருது விழாவில் தொடர்ந்து விருது பெற்று வந்தார்.
அதன்பின் அவரே தனது டிராக்கை மாற்றி இனி காமெடியனாக இல்லை நாயகனாக நடிக்க போகிறேன் என ஹீரோவாக படங்கள் நடித்து வருகிறார்.
அப்படி அவர் ஹீரோவாக நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் குலு குலு. ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
பட வசூல்
ஜுலை 29ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இப்போது வரை சென்னையில் மட்டும் ரூ. 89 லட்சம் வசூலித்துள்ளதாம்.
விரைவில் படம் சென்னையில் ரூ. 1 கோடியை எட்டும் என்கின்றனர்.
தொகுப்பாளினி டிடியின் அம்மா மற்றும் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
