’உயிரோடு இருக்க முடியாது’.. சூர்யா பட நடிகை திஷா பாட்னி வீட்டில் துப்பாக்கிசூடு.. நேரடி அச்சுறுத்தல்
திஷா பாட்னி
திஷா பாட்னி பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் திஷா பாட்னி. இவர் தமிழில் வெளிவந்த கங்குவா படத்தில் முன்னணி ஹீரோ சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இப்படம் படுதோல்வியை சந்தித்தது. நடிகை திஷா பாட்னி சமூக வலைத்தளத்தில் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். படத்தின் மூலம் இவர் பிரபலமானதை விட, போட்டோஷூட் மூலம்தான் ரசிகர்களை கவர்ந்தார்.
துப்பாக்கிச்சூடு
நேற்று நடிகை திஷா பாட்னி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடந்தது. மும்பை பரேலி சிவில் லைன்ஸ் பகுதியில் வில்லா எண் 40ல் வசித்து வரும் நடிகை திஷா பாட்னி வீட்டில், மாலை 4.30 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது. 2 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் யாரும் காயம் அடையவில்லை.
நேரடி அச்சுறுத்தல்
இதற்கு பிரபல தாதா கும்பலான ரோஹித் கோதாரா - கோல்டி பிரார் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. மேலும், திரைப்பட பிரமுகர்களுக்கு நேரடி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்தியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “வீரேந்திர சரண் மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிசூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதத்திற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்களை இழிவுபடுத்துவோரை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது”.