குணா படத்தில் நடித்த நாயகி இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளாரா?- எத்தனை பேருக்கு தெரியும், வீடியோ இதோ
குணா படம்
சந்தானபாரதி இயக்கத்தில் 1991ம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்க வெளியான படம் குணா.
அப்போது பேசப்படாத இப்படம் குறித்து இப்போது தான் மக்கள் அதிகம் பேசுகிறார்கள், காரணம் மஞ்சும்மல் பாய்ஸ். இதில் குணா படத்தில் இடம்பெற்ற குகையை அப்படியே தத்ரூபமாக செட் போட்டு படம் எடுத்துள்ளார்.
இந்த ஒரு விஷயம் பிரபலமாக பேசப்பட படமும் தமிழகத்தில் படு ஹிட்டாக ஓடிவிட்டது.
நாயகியின் விளம்பரம்
இந்த படத்தில் கமல்ஹாசனின் காதலியாக நடித்திருந்தவர் ரோஷினி.
கமல்ஹாசன் அபிராமி அபிராமி என படத்தில் கொண்டாடிய இந்த நடிகை குணா படத்திற்கு பிறகு சினிமா பக்கமே காணவில்லை.
எனக்கு அந்த நடிகை மீது இப்போதும் க்ரஷ், சைட் அடிக்கவே அங்கே செல்வேன்- கார்த்தி பிடித்த பிரபலம் யார்?
அவர் எங்கே போனார், இப்போது எப்படி உள்ளார் என மக்கள் பேசி வர நடிகை நடித்த ஒரு விளம்பரத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவர் Reynolds விளம்பரத்தில் நடித்திருக்கும் வீடியோ இதோ,
இந்த அபிராமி(ரோஷினி)நடித்த படம் வேறு ஏதும் உண்டா என்று படம் வந்த காலகட்டத்தில் தேடியதுண்டு.பின்பு கிடைத்ததுதான் அவர் நடித்த Reynolds விளம்பரம்.@teakkadai1 @chockshandle https://t.co/lAucQbFZOO pic.twitter.com/ECz3XiUmk9
— Pon Ilango/பொன் இளங்கோ (@ilango_pon) March 17, 2024