குண்டூர் காரம் திரை விமர்சனம்
குண்டூர் காரம்
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் சங்கராந்தி வெளியீடாக இன்று திரைக்கு வந்துள்ளது.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாக்ஷி சௌத்ரி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
கதைக்களம்
கதை: பிளாஷ்பேக் காட்சியுடன் படம் தொடங்குகிறது. ஜெகபதி பாபு அவரது சகோதரர் சுனில் மற்றும் ஆட்களுடன் சேர்ந்து வந்து ஜெயராமின் ஆலையை ஜெயராமின் ஆலையை எரிக்கிறார். அப்போது நடந்த களேபரத்தில் சுனில் கொல்லப்பட, ஜெயராம் தனது சகோதரருக்காக சிறை செல்கிறார்.
மேலும், செல்வாக்கு மிகுந்த பிரகாஷ் ராஜின் மகளான ரம்யா கிருஷ்ணன் மகன் மகேஷ் பாபுவை சிறுவயதில் விட்டுவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.
அதன் பின்னர் தாயின் பாசத்திற்கு ஏங்கும் மகேஷ் பாபு, அவருடன் சேர முயற்சிக்கிறார். ஆனால் பிரகாஷ் ராஜ் அதற்கு முட்டுக்கட்டை போட, தாத்தாவை சமாளித்து அம்மாவுடன் மகேஷ் பாபு சேர்ந்தாரா? முதல் கணவரான ஜெயராமின் நிலை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
அலசல்:
மகேஷ் பாபு தனக்கே உரித்தான மிடுக்குடன் நடித்துள்ளார். காமெடி, டான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட் என எல்லா ஏரியாவிலும் கலக்குகிறார். அதற்கு எற்றார் போல் தமனின் இசை தியேட்டரை அதிர வைக்கிறது.
மகேஷ் பாபுவிடம் ஒரு கையெழுத்துக்காக பிரகாஷ் ராஜ், ஸ்ரீலீலா, வெண்ணிலா கிஷோர், முரளி ஷர்மா போராடுவதிலேயே முதல் பாதி சென்றுவிடுகிறது. ஆனாலும் காமெடி, ஆக்ஷன் காட்சிகளை வைத்து ரசிகர்களை சோர்வடையாமல் திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குனர் திரிவிக்ரம்.
இரண்டாம் பாதியிலும் செண்டிமெண்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில், நகைச்சுவைகே அதிக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. எனினும் தனது மேனரிசத்தால் மகேஷ் பாபு ரசிகர்களை கவர்க்கிறார்.
இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் மீனாக்ஷிக்கு எந்த வேலையும் இல்லை. ஸ்ரீலீலா நடனத்தில் பட்டையை கிளப்புகிறார். பிரகாஷ் ராஜ், மகேஷ் பாபு தவிர எந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மொத்தத்தில் திரிவிக்ரமின் முந்தைய படங்களான அத்திரெண்டிகி தாரெடி, அலா வைகுண்டபுரமுலோ படங்களின் கலவையாக வந்துள்ளது இந்த குண்டூர் காரம்.
ப்ளஸ்:
காமெடி, பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகள்
மகேஷ் பாபுவின் மேனரிசம்
மைனஸ்:
படத்தின் நீளம்
அழுத்தம் இல்லாத திரைக்கதை
மொத்தத்தில் கொஞ்சம் கூட காரம் இல்லாத திரைக்கதை தான் குண்டூர் காரம்.
Rating: 2.5/5

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
