தனுஷ் முகத்தில் அடித்தது போன்று பேசுவார்.. ஜி. வி. பிரகாஷ் கூறிய டாப் சீக்ரெட்
ஜி. வி. பிரகாஷ்
வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி. வி. பிரகாஷ். முதல் படத்திலேயே தனது இசையின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இதன்பின் கிரீடம், பொல்லாதவன், ஆடுகளம், அங்காடி தெரு, மதராசபட்டினம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, சூரரைப் போற்று, அசுரன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி பிரகாஷ் டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் களமிறங்கினார்.
இதன்பின் சர்வம் தாளமயம், பேச்சுலர், நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷ் குறித்து முன்பு பேட்டி ஒன்றில் ஜி. வி. பிரகாஷ் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
டாப் சீக்ரெட்
அதில்," பொல்லாதவன் படம் தான் தனுஷுக்கு நான் இசையமைத்த முதல் படம். அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் நானும் தனுஷும் முதன் முதலாக சந்தித்துக்கொண்டோம்.
அதன் பின், நானும் அவரும் ரொம்பவே க்ளோஸ் ஆகி விட்டோம். சில நேரங்களில் திடீரென கிளம்பி எங்காவது ஊருக்கு ஒன்றாக செல்வோம்.
தனுஷ் மிகவும் நல்ல குணம் கொண்டவர் ஆனால் அவரைப் பொறுத்தவரை பிடிக்கவில்லை என்றால் மூஞ்சில் அடித்தது போன்று பேசிவிடுவார்" என்று தெரிவித்துள்ளார்.