சரியாக போகவில்லை ஆனால் எந்த வருத்தமும் இல்லை.. மனம் திறந்த ஜீ.வி.பிரகாஷ்
ஜீ.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ். குழந்தை பாடகராக அறிமுகமான இவர் இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கிங்ஸ்டன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
மனம் திறந்த ஜீ.வி.பிரகாஷ்
இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "சினிமா துறையில் 20 ஆண்டுகள் இருந்ததால் என்னால் பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என அனைத்தையும் எதிர்கொள்ள முடிகிறது. இத்தனை வருட அனுபவம் எனக்கு பெரிதாக உதவியிருக்கிறது.
கதைக்கு ஏற்ப இசையமைக்கிறேன். வித்தியாசமான ஒன்று தேவைப்படும்போது அதற்கு தகுந்த வழியில் நான் வேலை செய்கிறேன்.
நான் நடித்து இசையமைத்து தயாரித்த கிங்ஸ்டன் திரைப்படம் சரியாக போகவில்லை தான். ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஒரு படம் ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா, எனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை கவனிக்காமல் கடினமாக உழைப்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu
