தனுஷ்
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியானது.
அதை தொடர்ந்து இட்லி கடை என்ற திரைப்படம் உருவாகி வருகின்றன. தற்போது தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 - ம் தேதி வெளிவர உள்ளது.

இதற்கிடையே பாலிவுட்டிலும் தேரே இஷ்க் மெயின் என்ற ஒரு படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சனோன் கமிட்டாகியிருக்கிறார்.
ஓபன் டாக்
இந்நிலையில், தனுஷ் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "நான் தனுஷுடன் ஜோடியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. நான் இப்படத்தில் இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

தனுஷ் ஜோடியாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் முறையாக இவருடன் சேர்ந்து நடிப்பது அற்புதமான ஒரு விஷயம். அதேபோல் படமும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி: வெளியான இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் போட்டி அட்டவணை News Lankasri
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan