விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் ஜீ.வி.பிரகாஷ் - சைந்தவி.. உணர்ச்சிபூர்வ வீடியோ
ஜீ.வி.பிரகாஷ் - சைந்தவி
நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக வலம் வந்த இவர்கள் திடீரென சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்த விவாகரத்தை அறிவித்தபோது ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆனார்கள். ஆனால், விவாகரத்து பெற்ற பின்பும் ஜீ.வி.பிரகாஷ் மலேசியாவில் நடத்தும் கச்சேரியில் சைந்தவி பங்கேற்று பாட இருப்பதாக முன்பு தெரிவித்திருந்தார்.
உணர்ச்சிபூர்வ வீடியோ
இந்நிலையில், சைந்தவி அந்த கச்சேரியில் பங்கேற்று ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்து 'பிறை தேடும் இரவிலே' பாடலை பாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலானது.
விவாகரத்து பெற்ற பிறகும் அவர்கள் இருவரும் professional ஆக சேர்ந்து இருப்பது பற்றி ரசிகர்களும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோ இதோ,