அஜித் ஒன்னும் நம்ப வைத்து ஏமாற்றவில்லை.. எச். வினோத் பேட்டி
துணிவு
எச். வினோத் - அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் எச். வினோத் பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டியில் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை கொடுத்து வந்த எச். வினோத்.

அப்போது அஜித் ஏன் படங்களின் ப்ரோமோஷனுக்கு வர மாற்றாரு என்று கேள்வி கேட்டகப்பட்டது.
எச். வினோத் பேட்டி
இதற்கு பதிலளித்த எச். வினோத் " அஜித் சார் புரொமோஷனுக்கு வரமாட்டார் என்ற விஷயம் தெரிஞ்சு தானே தயாரிப்பாளர்கள் அவரை வெச்சு படம் பண்றாங்க. புரொமோஷனுக்கு வருவேன்னு நம்பிக்கை கொடுத்து அஜித் சார் எமாற்றவில்லையே.

இது மார்க்கெட்டிங் உலகம், பணம் பார்க்கணும்னா மார்க்கெட்டிங் பண்ணித்தான் ஆகணும். குண்டூசி விற்கக்கூட மார்க்கெட்டிங் முக்கியம். அதனால் நானே அஜித் சார் நிலைப்பாட்டில் இருந்து முரண் படுகிறேன். ஆனால், ஒருவரின் கொள்கை முடிவில் தலையிட நாம் யார்? " என்று கூறியுள்ளார் இயக்குனர் எச். வினோத்.