துணிவு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றிய படக்குழுவினர்.. இது தான் காரணமா?
துணிவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் 11-ம் தேதி மாபெரும் கொண்டாட்டங்களுடன் வெளியானது.
இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். துணிவு திரைப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் சண்டை காட்சிகள் அருமையாக இருந்தது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

கிளைமாக்ஸ்
இந்நிலையில் துணிவு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை ஹெச் வினோத் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இறப்பது போன்ற காட்சியினை எடுக்க பிளான் செய்தோம்.
ஆனால் படம் கமர்சியலாக இருக்க வேண்டும் என்பதால் படத்தின் கிளைமக்ஸ் காட்சியை மாற்றி விட்டோம் என்று கூறினார்.
வாரிசு படத்தை அடித்து நொறுக்கிய துணிவு.. இரண்டாம் நாள் வசூல்