அயோகியர்களின் ஆட்டம் தான் துணிவு.. எச். வினோத்தின் வெறித்தனமான அப்டேட்
துணிவு
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில், முதல் முறையாக இயக்குனர் எச். வினோத் துணிவு படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
எச். வினோத் பேட்டி
இந்த பேட்டியில் ' துணிவு பணத்தை பற்றிய படம், சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இது அயோகியர்களின் ஆட்டம்.
இப்படத்தில் அஜித் வில்லனாக நடித்துள்ளார் என்று நான் கூறினால் கண்டிப்பாக அனைவரும் இது மங்காத்தா 2வா என்று கேட்பார்கள். ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்ஸங்களும் படத்தில் உள்ளது ' என்று கூறியுள்ளார்.
எச். வினோத்தின் இந்த பேட்டி தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஒருபக்கம் நிலநடுக்கம் பேரிடர்... மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர் இராணுவம் News Lankasri
