அஜித்துக்கே அந்த விஷயத்தை செய்யாத எச். வினோத்.. ஆனால் விஜய்க்கு மட்டும் செய்துள்ளார்
இயக்குனர் எச். வினோத்
எச். வினோத் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த துணிவு படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக கமல் ஹாசன், தனுஷ், யோகி பாபு என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்திடம் ஒரு முறை கூட கதை கூறியதில்லை என்று கூறியுள்ளார்.
அஜித்துக்கு இல்லை, விஜய்க்கு மட்டும்
இதுவரை நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை அஜித் வைத்து இயக்கியுள்ள எச். வினோத் ஒரு முறை கூட அஜித்திடம் படத்தின் கதையை கூறியதே இல்லையாம்.

தன்னுடைய முதல் படத்திற்கு மட்டுமே கதாநாயகனிடம் கதை கூறினாராம். ஆனால், தளபதி விஜய்யிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தபோது மட்டும் கதையை படித்து காட்டியதாக கூறியுள்ளார் எச். வினோத்.
6 நாட்களாக தொடரும் கடும் போட்டி.. டாப் இடத்தில் இருப்பவர் விஜய்யா, அஜித்தா
இத்தாலியில் 2,700 ஆண்டுகள் பழமையான எட்ரஸ்கன் சமாதி - தங்கம், அரிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு News Lankasri