ஹெச். வினோத்தை நேரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. வைரலாகும் புகைப்படம்
லோகேஷ் - வினோத்
தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருப்பவர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹெச். வினோத்.
ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கி முடித்துவிட்டு, விஜய் மற்றும் கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் கைகோர்த்தார்.
அதே போல் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கி முடித்துவிட்டு, அஜித்துடன் கைகோர்த்து மூன்று படங்களை எடுத்தார் ஹெச். வினோத். அடுத்ததாக இவர் கமலை வைத்து இயக்கவுள்ளார்.
மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கவுள்ளார். இப்படி சமகால நண்பர்களாகவும் கலைத்துறையை சேர்ந்தவர்களாக இருக்கும் லோகேஷ் மற்றும் ஹெச். வினோத் சமீபத்தில் நேரில் சந்தித்துள்ளனர்.
சந்திப்பு
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் ஹெச். வினோத்தை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லோகேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
அதை தொடர்ந்து நேற்று ஹெச். வினோத் மற்றும் லோகேஷ் நேரில் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..