பகவந்த் கேசரி'யின் ரீமேக்கா ஜனநாயகன்..? பதிலளித்த இயக்குநர் ஹெச். வினோத்
ஜனநாயகன்
ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதில் இருந்து, இது தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்கிற பேச்சு இருந்து வருகிறது.

சிலர், இது முழு ரீமேக் அல்ல என கூறினாலும், சிலர் இது முழுமையான ரீமேக் என கூறி வருகிறார்கள். இப்படி தொடர்ந்து பல விதமாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார், ஜனநாயகன் படத்தின் இயக்குநர் ஹெச். வினோத்.
பதிலளித்த இயக்குநர்
அவர் கூறியதாவது, "நான் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை இங்கே மறுபடியும் கூறுகிறேன். இந்த கதை பகவந்த் கேசரி-யின் ரீமேக்கோ, அதிலிருந்து லைட்டா சில சீன்களை எடுத்து ரீமேக் செய்திருக்காங்களோ, அல்லது அதில் உள்ள ஒரு சீனை மட்டும் எடுத்து ரீமேக் செய்திருப்பாங்களோ.. இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இதைப்பற்றி படம் பார்க்க வர்றவங்க கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "ஏனென்றால், இது ஒரு தளபதி படம். இது ரீமேக் படம்.. நான் ஏற்கனவே அந்த படத்தை பார்த்துவிட்டேன். அதன்பின் ஏன் இந்த படத்தை பார்க்கணும்' என்கிற எண்ணம் சிலருக்கு இருக்கும். இல்லை சிலருக்கு கோபம்கூட இருக்கும். அவர்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். நீங்க ஒரு ஷோ மட்டும் காத்திருங்க. அந்த ஷோவில் உங்களுக்கு விடை கிடைத்துவிடும்" என்றார்.
மேலும், "அடுத்தடுத்து டீசர், டிரைலர், பாடல்கள் வெளிவரும், அதில் ஓரளவுக்கு உங்களுக்கு தெரிய வரும். இந்த விஷயத்தில் என்னால், ஆமாம் என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது" என கூறியுள்ளார்.