நான் வாரிசு படம் தான் பார்க்க போறேன்.. துணிவு இயக்குனர் எச். வினோத் அதிரடி
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படமும், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகிறது.
மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரு திரைப்படங்களின் ப்ரோமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எந்த படம் பார்ப்பீர்கள்
இந்நிலையில், துணிவு படத்திற்காக இயக்குனர் எச். வினோத் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் படத்தையும் பற்றியும், அஜித்தை பற்றியும் பல சுவாரஸ்யான விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் முதலில் துணிவு படத்தை பார்ப்பீர்களா அல்லது வாரிசு படத்தை பார்ப்பீர்களா என்று இயக்குனர் எச். வினோத்திடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
எச். வினோத் பதில்
இதற்க்கு பதிலளித்த எச். வினோத் ' நான் வாரிசு படத்தை தான் பார்ப்பேன். படத்தின் இயக்குநரா துணிவு படத்தை பல முறை பார்த்துவிட்டேன். பார்க்காதது வாரிசு தான். அப்போ அதை தான் பார்க்க முடியும் ' என்று கூறியுள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
